“நல்ல புத்திசாலி பொண்ணு!”.. “காணாமல் போன பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த சோகம்!”
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் காணமல் போன பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம், அந்த பல்கலைக் கழகத்தின் குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகத்தி பயின்று வந்து இந்திய வம்சாவளி மாணவி 21 வயதான ஆன் ரோஸ் ஜெர்ரி என்பவரை காணவில்லை என்கிற புகார் எழுந்ததை அடுத்து போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் தேடினர். அப்போதுதான் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த குளத்தில் இருந்து அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண் தற்செயலாக குளத்தில் விழுந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால், அப்பெண்ணின் மரணம் ஒரு விபத்தாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். ஜெர்ரி பற்றி பேசிய அவரது நண்பர்கள், பியானோ வாசிப்பதில் அப்பெண் சிறந்து விளங்கியதாகவும், மிகவும் புத்திசாலியான மாணவி என்று பெயரெடுத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
