“காதலை ஏற்க மறுத்தது மட்டுமில்லாம..”.. மதுரை இளைஞரால் “மாணவிக்கும் தாய்க்கும் நேர்ந்த கொடூரம்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 20, 2020 02:27 PM

மதுரை மாவட்டத்தில் தன் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்த கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth kills girl and her mother for refusing his proposal

மதுரை மாவட்டம் கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அதே பகுதியில் வசிக்கும் மதன்குமார் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை காதலிக்குமாறு, மதன்குமார் அம்மாணவியை வற்புறுத்தியதாக தெரிகிறது.

எனினும் இந்த விஷயத்தை, மாணவி தனது தயாரிடம் கூறிய்ள்ளார். இதை அறிந்த மாணவியன் தாயார், உடனடியாக மதன்குமாரை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் மாணவியையும், அவரது தாயாரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்நிலையில் தாய், மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக போராடி வருகின்றனர்.

Tags : #COLLEGESTUDENT #MADURAI