“கடனில் தத்தளித்த அப்பா!”.. “காதலனின் எதிர்பாராத செயல்”.. “என்ஜினியரிங் மாணவி எடுத்த சோக முடிவு!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 09, 2020 05:39 PM

தர்மபுரியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவருடைய மகள் லோகேஸ்வரி. 20 வயதான இந்த மாணவி திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

teen girl commits suicide after her boyfriend refused to help

இவருடன் தர்மபுரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வருகிறார். இருவரின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ‌ இந்த நிலையில் இவர்களின் காதலை இவர்களுடைய பெற்றோர் ஏற்றுக் கொண்டதோடு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்தனர். கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக இவர்களுக்கு வாக்குறுதியும் தந்தனர்.

ஆனால் லோகேஸ்வரியின் தந்தை ஜெயவேலுக்கு அதிக கடன்கள் இருந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் கல்வி உதவித்தொகை பெற்று யோகேஸ்வரியின் படிப்பைத் தொடர முடிவு செய்த அவர், கல்வி உதவித்தொகை விண்ணப்ப மனு அளிப்பதற்காக கல்லூரிக்கு வருமாறு காதலனை அழைத்ததாகவும், ஆனால் அதற்கு யோகேஸ்வரியின் காதலன் மறுத்ததாகவும் தெரிகிறது.

ஏற்கனவே தந்தையின் கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த லோகேஸ்வரி தனது காதலன் உதவிக்கு வர மறுத்ததால் மேலும் மன உளைச்சல் அடைந்ததோடு, நேற்று இரவு தான் தங்கியிருந்த தனியார் விடுதியிலேயே தற்கொலை செய்து ‌ கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, லோகேஸ்வரி உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதலனுடனான தகராறில் வேறு ஏதாவது காரணமாக இருந்தாரா போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.