‘உற்சாக’ மிகுதியில் ‘மருத்துவ’ மாணவர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘அடுத்த’ நொடி நடந்த ‘விபரீதம்’... ‘உறைந்துபோய்’ நின்ற ‘நண்பர்கள்’...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jan 15, 2020 01:31 PM
அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையே தாவிக் குதிக்க முயற்சித்தபோது மருத்துவ மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்திய அமெரிக்க மாணவரான விவேக் சுப்பிரமணி (23) அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) மாகாணத்தில் உள்ள ட்ரெக்செல் மருத்துவக் கல்லூரியில் (Drexel College of Medicine) மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது விவேக் உற்சாக மிகுதியில் அடுக்குமாடி ஒன்றின் உச்சியிலிருந்து இன்னொரு மாடிக்கு தாவ முயன்றதாகக் கூறப்படுகிறது. அதில் தவறி கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், முன்னதாக மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் மது அருந்தியது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தின்போது விவேக் மற்றும் அவருடைய 2 நண்பர்கள் அடுக்குமாடிக் கட்டிடத்தின் கூரைகளுக்கு இடையில் குதித்துகொண்டிருந்ததாக சாட்சிகள் கூறியுள்ளனர்.
அப்போது விவேக் தவறி விழு, ரத்த வெள்ளத்தில் அவர் கிடப்பதைப் பார்த்து அவருடைய நண்பர்கள் பேச முடியாமல் உறைந்துபோய் நின்றுள்ளனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் விவேக்கிற்கு தேவையான முதலுதவி செய்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு விவேக்கை அழைத்துச் செல்ல, அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
