VIDEO: ‘ஒரு நிமிஷம் சார்’!.. பட்டமளிப்பு விழாவை அதிரவைத்த மாணவி..! வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Dec 25, 2019 01:58 PM
பல்கலைக்கழகத்தில் பதக்கம் பெறுவதற்கு முன்பு கல்லூரி மாணவி சிஏஏ நகலை கிழித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி, கர்நாடகா, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை திருப்பியுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ரபிஹா என்ற மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குடியரசு தலைவர் சென்ற பின்னரே தான் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறி தங்கப்பதக்கத்தை மாணவி ஏற்க மறுத்தார்.
இந்நிலையில் மேற்வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தேப்ஸ்மிதா சவுத்திரி என்ற மாணவி தங்கப் பதக்கத்தை வாங்குவதற்கு முன்பாக குடியுரிமை சட்டத்திருத்த நகலை மேடையிலேயே கிழித்தார். பின்னர் தனது தங்கப்பதக்கத்தை வாங்கி சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Debsmita Chowdhury, a gold medalist tore up the controversial #CitizenshipAct in protest while accepting her degree at the Jadavpur University convocation today pic.twitter.com/iBCwuS9A7w
— Indrojit | ইন্দ্রজিৎ (@iindrojit) December 24, 2019