darbar USA others

'அப்பா மார்க் கொஞ்சம் கம்மி தான்'...'லைனில் இருந்த பெற்றோர்'... கதறி துடித்த பி. டெக் மாணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jan 13, 2020 10:19 AM

பெற்றோர் செல்போன் இணைப்பில் இருக்கும்போதே மாணவர் மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MP : Student Falls Off Hostel Building While Talking On Phone, Dies

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு 22 வயது ஜார்கண்டை சேர்ந்த சச்சின் கேஷரி என்ற மாணவர் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் தினமும் இரவு தனது பெற்றோருடம் பேசுவது வழக்கம். அந்த வகையில், இரவு 8 மணி அளவில் விடுதியின் 3-வது மாடியில் நின்று கொண்டு, செல்போனில் தன்னுடைய பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது பரீட்சையை நன்றாக எழுதவில்லை, எனவே குறைவான மதிப்பெண்கள் தான் பெறுவேன் என சோகத்துடன் கூறியுள்ளார். கேஷரி பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மகன் தங்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே, எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவம் கேஷரியின் பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சச்சின் கேஷரி பரிதாபமாக இறந்தார். நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மாணவர் ஒருவர்,  தான் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் தான் பெறுவேன் என, கேஷரிஅவரது பெற்றோரிடம் கூறியதாக அந்த மாணவர் தெரிவித்தார்.

இதற்கிடையே சம்பவ இடத்தை ஆய்வு நடத்திய தடயவியல் நிபுணர்கள், மாணவர் மாடியில் இருந்து கால் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறினார்கள். இருப்பினும் காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்கள்.

Tags : #ACCIDENT #COLLEGESTUDENT #JABALPUR HOSTEL #PHONE #DIES #FALLS OFF #INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY #B.TECH STUDENT