அசுர வேகத்தில் சென்ற பேருந்துகள்... பதறிய பயணிகள்... பொதுமக்கள் கொடுத்த தண்டனை... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 18, 2019 12:44 PM
அதிவேகத்தில் செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர்களை பேருந்தின் மேற்கூரை மீது ஏற்றி, தோப்புக்கணரம் போட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மோவ், மன்பூர் மற்றும் பிதாம்பூர் வரை பேருந்துகளை இயக்கும் சில ஓட்டுநர்கள் பேருந்துகளை அதிவேகமாக இயக்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. குறுகலான பாதையில், நடந்து செல்லும் மக்களை கவனத்தில் கொள்ளாது, நினைத்த இடத்தில் பயணிகளை ஏற்றுவது இறக்குவது என்று பேருந்து ஓட்டுநர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து நகராட்சி தலைவர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அவர்கள் போக்குவரத்து போலீஸ் மற்றும் போகுவரத்து துறை அதிகாரிகளிடம் புகார் குறித்து தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர். நடுரோட்டில் பேருந்தை நிறுத்துவது, அசுரவேகத்தில் போவது என்று பேருந்து ஓட்டுநர்களும் தங்களது பணியை தொடர்ந்து செய்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் நகராட்சித் தலைவர் ஷிவ் டிங்கு ஆகியோர் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதன்படி அதி வேகத்தில் பேருந்தை இயக்கிய 5 ஓட்டுநர்களை, கடந்த திங்கள் கிழமை அன்று நடுரோட்டில் பேருந்தை நிற்க வைத்து, அதன் மீது ஏறச் சொல்லி, 15 தோப்புக் கரணம் போட வைத்தனர். மேலும் பேருந்துகளை மீண்டும் அதிவேகமாக இயக்கக்கூடாது என எச்சரித்தும் அனுப்பினர். அப்படி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடி நிற்க சாலையின் நடுவே நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.