VIDEO: 'ஆப்ரேஷன் தியேட்டரில்'... 'அறுவை சிகிச்சை'யின் போது... 'வயலின்' வாசித்த 'நோயாளி'!... திகைப்பூட்டும் காரணத்தால்... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 19, 2020 07:03 PM

மூளை அறுவை சிகிக்சை செய்யும் போது, நோயாளி வயலின் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

patient plays violin during brain surgery video goes viral

லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில், டாக்மர் டர்னர் என்ற 53 வயதான பெண்ணின் மூளையில், உள்ள மில்லி மீட்டர் அளவிலான கட்டி அகற்றப்பட்டது. டாக்மருக்கு 2013ஆம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்ட போது மூளையில் சிறிய அளவில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் இந்த அறுவை சிகிச்சையால் வயலின் வாசிக்கும் திறன் இழந்துவிடலாம் என்று அதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், தான் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பேராசிரியர் கீமார்ஸ் அஷ்கன், இந்த அறுவை சிகிச்சையால் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை கூறி உள்ளார். இசையில் பட்டம் பெற்ற மற்றும் திறமையான பியானோ கலைஞரான பேராசிரியர் அஷ்கன், டாக்மரின்  இசை திறன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை வடிவமைத்தார்.

அவரிடம் தனது வயலின் இசை திறமை தன்னை விட்டு செல்வதை தன்னால், ஏற்றுக்கொள்ள இயலாது என்று டாக்மர் தெரிவித்ததால், அறுவை சிகிச்சைக்கு முன் வயலின் வாசிப்பதனால் மூளையில் ஏற்படும் இயக்கத்தை மருத்துவர்கள் வரைபடமாக தயாரித்துள்ளனர். அதன்படி மயக்கத்தில் இருந்த டாக்மர் வயலின் வாசித்துள்ளார். அப்போது மருத்துவர்கள் தலையை பிளந்து சிறு சிறு கட்டிகளை அகற்றியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, டாக்மர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அது குறித்து பேசுகையில், "10 வயதில் இருந்து வயலின் வாசித்து வருகிறேன். ஒருவேளை என்னுடைய வயலின் வாசிப்பு திறன் இழந்திருந்தால் இதயம் நொறுங்கி போயிருக்கும்" என்று டாக்மர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் அறுவை சிகிச்சையில் வயலின் வாசித்த வீடியோ பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Tags : #SURGERY #PATIENT #VIOLIN