'எங்கே செல்கிறது மனிதம்!?'... '28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை!'... உயிரை உலுக்கும் அவலம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Mar 16, 2020 12:11 PM

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

28 lakh children unable to attend schools in syria unicef

கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் சிரிய உள் நாட்டுப் போரில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர்ச் சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போர், வன்முறை, மரணம் மற்றும் இடப்பெயர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மனதளவில் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Tags : #SYRIA #SYRIANCIVILWAR #SAVESYRIA #CHILDREN #SCHOOLING