“அப்பாவோட கள்ளக்காதலி.. உச்சத்துக்கு போன டார்ச்சர்”.. “ஆவியா வந்து பழிவாங்குவேன்”.. 9 வயது மகனின் உருக்கமான பேச்சு.. மகன்களுடன் தந்தை தற்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 03, 2020 07:19 PM

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் 42 வயதான விவசாயக் கூலி சுந்தர்.  இவரது மனைவி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுவதை அடுத்து இவர் தனது மகன்கள் சுனில் (13) மற்றும் விமல் (9) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.

man kills his children after affair left him மகன்களுடன் தந்தை தற்கொலை

இந்த நிலையில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தனது மகன்கள் இருவருக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ததாக வெளியான தகவலையடுத்து அங்கு விரைந்த போலீசார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது சுந்தர் தனது மகன்களுடன் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் சுந்தரின் செல்போன்  ஆனில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதிலிருந்த காட்சியை கண்ட போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். அதில் தனது இரு மகன்களுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்கு முன்பாக சுந்தர் பேசிய வீடியோ பதிவாகி இருந்தது.

அதன்படி தனது மனைவி இறந்த பின்னர் லட்சுமி என்கிற பெண்ணுடன் தனக்கு தகாத உறவு இருந்ததாகவும், வேறு ஒருவருடன் திருமணமாகி குழந்தை இருந்த லட்சுமி என்பவர், சுந்தரின் மனைவி இந்துமதி இறந்த பின்பு சுந்தருடன் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்ட சுந்தர் லட்சுமி தனது மகன்களை கொடுமை செய்ததாகவும் தன்னிடம் பணம் கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ‌ இதனால் இருவருக்கும் இடையே எழுந்த தகராறு காரணமாக லட்சுமி சுந்தருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், இதனால் லட்சுமி மீது அலாதி பிரியம் வைத்திருந்த சுந்தர் மனமுடைந்து தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும் கூறி சுந்தர், இதற்கென நேற்றிரவு குடிபோதையில் வந்த அவர் நிறைய வாழைப் பழங்களை வாங்கி வந்து அவற்றை துண்டு துண்டாக நறுக்கி அதில் குருணை மருந்து என்று சொல்லக்கூடிய விஷத்தைக் கலந்ததுடன், தன் மனைவியுடன் இருக்கக்கூடிய குடும்ப போட்டோவை சாமி படங்களுடன் சேர்த்து வைத்து பூஜை செய்துள்ளார்.

அதன் பின்னர் தனது மகன்கள் கொடுமை செய்யப்பட்டதையும் தன் மனைவி உள்ளிட்ட 4 பேரின் இறப்பிற்கும் லட்சுமிதான் காரணம் என்றும் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்ட சுந்தர் தனது மகன்களை கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துகொள்ளும் நிமிடத்திற்கு முன்பு வரை நடந்தவற்றை அந்த வீடியோவை முழுமையாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அதே வீடியோவில் பேசிய சுந்தரின் இளைய மகன் விமல் தன் அப்பாவின் கள்ளக்காதலி லட்சுமியின் டார்ச்சர் உச்சத்தில் போனதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், நிச்சயம் ஆவியாக வந்து லட்சுமியை பழிவாங்க உள்ளதாகவும், ஏற்கனவே இறந்து போன தன் அம்மாவின் மடியில் சென்று உறங்க போவதாகவும் கூறியிருப்பது பார்ப்பவர்களை கண்கலங்க செய்துள்ளது.  இதுகுறித்து லட்சுமி அழைத்து அலங்காநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #FATHER #CHILDREN #AFFAIR