‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Mar 16, 2020 12:05 PM

கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், சென்னை மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க தவறுவதாக, இந்திய வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் கூறியுள்ளார்.

Ashwin feels Chennai people are ignoring Corona WARNING

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 110 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பள்ளிகள். வணிக வாளகங்கள், திரையங்கள்,  விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் போட்டிகள் என அனைத்தும் மூடப்பட்டும், தடை செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘கொரோனா முன்னெச்சரிக்கையை சென்னை மக்கள் தவிர்க்கிறார்கள். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசு கூறியதை, சென்னை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டு இருக்கலாம்’ என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலும் சுகாதாரத்துறை அனுதினமும் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், வரும் முன் காப்பதே சிறந்தது என்று மக்கள் நினைத்து அதற்கேற்றவாறு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.