'உலகை' உலுக்கிய குழந்தை 'அய்லான்' மரணம்... 'சட்டவிரோதமாக' அழைத்துச் சென்ற '3 பேருக்கு'... எத்தனை 'ஆண்டுகள்' சிறை 'தெரியுமா?'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 16, 2020 08:55 AM

உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தி மரணம் தொடர்பாக  3 பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

3 sentenced to 125 years in prison for child Aylan Kurdi death

சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்ல முற்படுகின்றனர். சிலர் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதால்  வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று விடுகிறது.

அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12  பேர் உயிரிழந்தனர். அதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உயிரிழந்து கரை ஒதுங்கிய புகைப்படம் உலகையே உலுக்கியது. 

அகதிகளின் துயரங்களை விவரிக்கும் விதமாக அமைந்த இந்த புகைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. இதையடுத்து, அந்த படகு விபத்து தொடர்பாக அகதிகளை சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்றதாக 3 பேர் துருக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் 3 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Tags : #AYLAN KURDI #SYRIA #3 SENTENCED #125 YEARS