ஒரு 'அழகு ராணி'யின் முயற்சியால்... கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக விளங்கும் 'அதிசய நாடு'!.. யார் இவர்? மக்கள் ஏன் இவரை கொண்டாடுகின்றனர்?
முகப்பு > செய்திகள் > உலகம்தட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார்.

உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால் சமோவா என்ற குட்டி நாடு கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது. இதற்கு காரணம் ஒரு அழகி தான் என கூறப்படுகிறது.
அந்த அழகியின் பெயர் ஃபோனோ (ஃபோனோய்பாஃபோ மெக்ஃபார்லேண்ட்-சீமானு) மிஸ். சமோவா அழகி போட்டியில் பட்டம் வென்று உள்ளார்.
ஃபோனோ அழகிப்பட்டம் பெற்ற நேரத்தில், அவரது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 2,00,000 பேரில் 6,000 பேருக்கு மணல்வாரி அல்லது மண்ணன் என்று அழைக்கப்படும் அம்மை நோய் தொற்றியிருந்தது. இந்த நோய்க்கு 83 பேர் பலியாகி இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்! சமோவா நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஒரு மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொது சுகாதார செவிலியரான ஃபோனோ ஒரு தன்னார்வலராக நாட்டு மக்களுக்கு சேவை செய்ய களமிறங்கினார்.
வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுக்களுடன் தானும் இணைந்துகொண்டார். அவர் சந்தித்த ஒவ்வொரு குடும்பமும், தங்கள் வீட்டு வாசலில் தனது நாட்டு நிற்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள். தான் அப்போது தன்னை மிஸ். சமோவாக எண்ணவில்லை, தடுப்பூசி போடும் குழுவில் ஒருவராகத்தான் தன்னை எண்ணிக்கொண்டேன் என்கிறார் ஃபோனோ.
துரதிர்ஷ்டவசமாக அவர் சந்தித்த சில குடும்பங்கள் அப்போதுதான் தங்கள் குழந்தை ஒன்றை சாகக்கொடுத்திருந்தன. குழந்தைகளைப் பறிகொடுத்த சிலர், இதைத்தான் அந்த மிஸ். சமோவா பெண் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது நம்மில் பலர் அதற்கு செவிகொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டார்கள். வேறு வகையில் சொல்லப்போனால், இக்கட்டான நிலையிலிருந்த தன் நாட்டு மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார் ஃபோனோ.
மணல் வாரி அம்மையில் பட்ட அடியில் விழித்துக்கொண்ட சமோவா நாடு, உலகில் கொரோனா பரவுவதை கண்டதும் உஷாராகிவிட்டது. பிப்ரவரி மாதமே சீனா அல்லது ஹாங்காங்கிலிருந்து வருவோர், அவர்கள் ஏற்கனவே இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலன்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சிலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது. பின்னர், சர்வதேச பயணம் வரை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
இன்று கொரோனா இல்லாத நாடாக சமோவா திகழும் நிலையில், ஃபோனோ கொரோனா குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு ஏற்படுத்திவருகிறார். உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய அழகிதான் இவர்.

மற்ற செய்திகள்
