'அதிவேகத்தில் தினமும் எகிறும் பாதிப்பு'... 'நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா'... 'நிலைகுலையும் வல்லரசு நாடுகள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 12, 2020 07:55 AM

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Russia has moved to the 3rd position of most affected countries.

சீனாவின் சந்தையில் உருவாகிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் அமெரிக்கா முதலிடத்திலும், 2-ம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து நாடுகள் இருந்தன.

இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நகர்ந்தது. கடந்த 8 நாட்களாக, ரஷியாவில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 21 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 39 ஆயிரத்து 801 பேர் மட்டுமே முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினமும் எகிறும் பாதிப்பால் அந்நாட்டு மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பு வல்லரசு நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது.