எங்க நாட்டுக்கு 'அதெல்லாம்' தேவையில்லை... கொரோனாவை 'வித்தியாசமாக' கையாளும் 'அரசு'... ஆய்வாளர்கள் 'எச்சரிக்கை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 29, 2020 05:22 PM

ஸ்வீடனின் அணுகுமுறையால் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

How Sweden Has Faced Corona Virus Outbreak Without Lockdown

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு இன்றி சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. அதாவது 50 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது, வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிபவர்கள் அதை செய்யலாம் போன்ற கட்டுப்பாடுகளே அங்கு விதிக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு இணையதள வகுப்புகள் இருந்தாலும், பள்ளிக் குழந்தைகள் வகுப்பிற்கே செல்கின்றனர்.

அத்துடன் அலுவலகங்கள், உணவகங்கள், சலூன்கள் போன்றவை வழக்கம்போல திறந்துள்ள நிலையில், சுமார் 1.03 கோடி மக்கள்தொகை கொண்ட அங்கு கொரோனா உயிரிழப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 21 ஆக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்பெயினில் உயிரிழப்பு விகிதம் 44 ஆகவும், இத்தாலியில் உயிரிழப்பு விகிதம் 49 ஆகவும் உள்ளதால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாவும், தங்களுடைய நாட்டிற்கு இந்த அணுகுமுறையே சரியானது எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அணுகுமுறையால் அங்கு கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் டென்மார்க்கில் லட்சம் பேரில் இறப்பு விகிதம் 7 ஆகவும், நார்வே மற்றும் பின்லாந்தில் 4 ஆகவும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் ஸ்வீடனின் நிலை  மோசமாவதற்குள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதுவரை ஸ்வீடனில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 2,200 பேர் உயிரிழந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.