இந்த 'ஸ்மார்ட் ஹெல்மெட்டை' மட்டும் 'போட்டுக்கிட்டா போதும்'... '7 மீட்டர்' தூரத்துலயே 'கொரோனாவ கண்டுபிடிச்சிடலாம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 13, 2020 07:36 PM

கொரோனா அறிகுறியை காட்டிக் கொடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள விமான நிலையத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

Corona smart helmet to betray signs of innovation in Italy

கொரோனா அறிகுறியான காய்ச்சல் இருந்தால் காட்டிக் கொடுக்கும் 'ஸ்மார்ட் ஹெல்மெட்' ஒன்றை இத்தாலி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டை ரோம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து பார்த்துள்ளனர்.

இந்த ஹெல்மெட்டை அணிந்தால் 7 மீட்டர் தூரத்திற்குள் உள்ளவர்களின் உடல் வெப்பநிலை குறித்து அறிய முடியும். அதன் மூலம் காய்ச்சல் உள்ளவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். விமான நிலையத்தில் இதனை பாதுகாப்பு அதிகாரிகள் அணிந்துகொண்டு பயணிகள் நுழையும் இடங்களில் பணியில் ஈடுபடுவார்கள்.

ஒருவரது உடல் அதிக வெப்பநிலையில் இருப்பது கண்டறியப்பட்டால் அவரது விமான பயணம் ரத்து செய்யப்படும். மேலும், காய்ச்சல் உள்ளவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்.