மீண்டும் தொடங்கும் ரெயில் சேவை... 'கட்டாயம்' இதெல்லாம் செய்யணும்... புதிய 'விதிமுறைகள்' அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 10, 2020 10:08 PM

மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரெயில் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Indian Railways to starts from May 12 with minimum trains

இதன் முதற்கட்டமாக 30 சேவைகள் கொண்ட 15 பயணிகள் ரெயில்கள் இயக்கப்படவுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரெயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை மாலை நான்கு மணி முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தளத்தில் மட்டும் முன்பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிசீட்டு உருத்திப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே ரெயில்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், முன்பதிவு செய்து ரெயிலில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அதே போல, ரெயில் நிலையத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : #RAILWAYS