'மச்சான் நான் என்ன செய்வேன் தெரியுமா'?... 'இன்ஸ்டா குரூப்பில் நடந்த சாட்டிங்'...'ஆடிப்போன மாணவி'.... ட்விட்டரில் வெளியான மாணவர்களின் அட்டகாசம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 05, 2020 11:36 AM

இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என குரூப் ஆரம்பித்து, மாணவிகளை எப்படி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யலாம் என, பள்ளி மாணவர்கள் சாட்டிங் செய்த விவகாரம் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Boys locker room : Delhi boys create Instagram group to share photos

நாடு முழுவதும் ஊரடங்கு தற்போது அமலில் இருக்கும் நிலையில், அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டிலேயே இருப்பதால் பெரும்பாலும், கணினி மற்றும் செல்போனிலேயே அதிக நேரம் முடங்கி கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்தது. தற்போது அதனை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். அதில் மிகவும் ஆபாசமாக பேச தொடங்கிய அந்த மாணவர்கள், ஒரு கட்டத்தில் தங்களுடன் படிக்கும் மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என பேசியுள்ளார்கள். அதோடு தங்களுக்கு தெரிந்த பள்ளி மாணவிகள், மற்றும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, அந்த குரூப்பில் பகிர்ந்ததோடு, அவர்களின் உடல் அமைப்பு குறித்து மாணவர்கள் பேசியுள்ளனர்.

தன்னுடன் படிக்கும் மாணவர்களின் செயலை அறிந்த மாணவி ஒருவர், அந்த மாணவர்கள் பேசி கொண்ட மெசேஜ்களை பார்த்து அதிர்ந்து போனார். அதோடு மாணவர்கள் பேசிக்கொண்ட மெசேஜ்களை வெளியிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரில் #boyslockerroom என்ற ஹேஷ்டேக்கில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் இதுபோன்று வக்கிரமான மனநிலைக்கு செல்வது என்பது எதிர்காலத்தில் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். இதுபோன்ற செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி ஏறிய வேண்டும். பெற்றோரும் தங்களது பிள்ளைகள் செல்போன், மற்றும் கணினிகளில் என்ன செய்கிறார்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பேதே பலரின் கருத்தாக உள்ளது.