பல வருஷமா புகைப்பிடிப்பவரா நீங்க.? அப்போ இந்த ‘குட் நியூஸ்’ உங்களுத்தான்..! வெளியான சூப்பர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்பல ஆண்டுகளாக புகைப்பிடித்து வந்த பழக்கத்தை நிறுத்தினால் செலவு இல்லாமல் நுரையீரலை சுத்தமாக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு கண்டயறிப்பட்டுள்ளது. நீங்கள் பல ஆண்டுகளாக புகைப்பிடிப்பவர் எனில் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் புகைப்பிடிப்பதை ஒரேயடியாக நிறுத்திவிட்டால், நுரையீரல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதால் அதில் உள்ள வேதிப்பொருள்கள் நுரையீரல் செல்களின் டி.என்.ஏ-வில் மாறுதல்களை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்குகிறது. அதனால் நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டால், சேதமடைந்துள்ள செல்கள் அழிந்து அந்த இடத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புகைப்பிடிப்பவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டுபிடிகப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது எல்லா வயதினருக்கும் பொருந்தும் என்றும் கூறப்படுள்ளது.
இது மருத்துவ துறைக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாகவும், புகைப்பழக்கத்தை கைவிட நினைப்போர்க்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.
