‘சுபஸ்ரீ பலியான அதேப் பகுதியில்’... ‘பேனரை அகற்றியபோது’... ‘இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 16, 2019 12:32 PM

சென்னையில் பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த அதேப் பகுதியில், பேனரை அகற்றும் போது, இளைஞர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth admitted in hospital while he removing the banner

சென்னை பள்ளிக்கரணையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி, அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாலையோரங்களில் உள்ள பேனர்களை அகற்றும் பணி, தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சுபஸ்ரீ உயிரிழந்த பகுதியில் இருந்து, சுமார் 50 அடி தூரம் தள்ளி, அடுக்குமாடி குடியிருப்பின் முன்பாக, பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

60 அடி உயரம் உள்ள பேனரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வந்தனர். பேனரை அகற்றும்போது, தடுமாறி  ராஜேஷ் என்ற இளைஞர் கீழே விழுந்தார். அவரது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்நிலையில், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Tags : #BANNER #CHENNAI #SUBASHREE #SUBHASREE