'சின்ன சண்ட இப்படி போய் முடியும்னு நினைக்கல'...'சென்னை பெண் தொழிலதிபரின் தற்கொலை'...அதிர்ச்சி பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 13, 2019 12:18 PM

லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணை சேர்மேன் ரீட்டா லங்கா லிங்காவின் தற்கொலை பலரையும் அதிரச்செய்துள்ளது. தற்கொலைக்கான அதிர்ச்சி பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

Joint MD of Lanson Toyota Reeta found dead here is reason for suicide

டொயோட்டா நிறுவனத்தின் டீலரான லான்சன் டொயோட்டா, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இதன் சேர்மேனாக இருப்பவர் தொழிலதிபர் லங்கலிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்காலிங்கம். இவர் அதே நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லாவண்யா என்ற பெண்ணும் லிவாஸ் என்ற மகனும் உள்ளனர். மகள் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் நிலையில், மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தந்தையுடன் தொழிலை கவனித்து வருகிறார்.

இதனிடையே இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவு இவர்களது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. இதற்கிடையே சென்னையில் இரு தினங்களுக்கு முன்பாக தமிழகத்திலுள்ள அனைத்து கிளை லான்சன் டொயோட்டோ நிறுவனத்தின் மேலாளர்களுடன் ரீட்டா லங்காலிங்கம் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பொருளாதார மந்தநிலை காரணமாக நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நலிவு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அப்போது மேலாளர்களை ரீட்டா கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் காரில் வீட்டிற்கு செல்லும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ரீட்டா வீட்டிற்கு கோபமாக சென்று விட, சிறிய சண்டை தானே சரி ஆகிவிடும் என எண்ணிய கணவர் லங்கலிங்கம், நேற்று முன்தினம் இரவு ஹோட்டலுக்கு சென்று தங்கியுள்ளார். இதனிடையே நேற்று காலை ரீட்டாவின் வீட்டுக்கு சென்ற சூப்பர்வைசர் இயேசுபாதம் என்பவர், ரீட்டா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக ரீட்டாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விசாரணையில் வீட்டின் ஜன்னல் திரை சீலையை பயன்படுத்தி ரீட்டா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

தொழிலில் நலிவு, கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபம் போன்ற காரணங்களால் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #LANSON TOYOTA #REETA LANKALINGAM #CHENNAI