'திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு'.. தனியார் 'கல்லூரி பேருந்தில்' ஏற்பட்ட 'விபத்து'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 12, 2019 06:10 PM

சென்னையில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, பேருந்து பற்றி எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN - Chennai Private College Bus got fire accident

சென்னை பெருங்களத்தூரில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றுவது போல் இருந்ததால், அதை உணர்ந்த பேருந்து டிரைவர், சுதாரித்து உடனே பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போதுதான் பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியதை அனைவரும் கவனித்தனர்.

பேருந்தில் மாணவர்கள் இருந்ததாகவும், பேருந்து பற்றி எரியத் தொடங்கியதால், உடனே மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சுதாரித்த டிரைவர், உடனே பேருந்தில் இருந்து இறங்கி தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பது பற்றி தீயணைப்புத் துறையினரிடம் தகவல் அளித்தார்.

இதனையடுத்து 2 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் தீயை அணைக்கத் தொடங்கினர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்துவிட்டது. எனினும் பேருந்தில் இருந்த யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #COLLEGESTUDENTS #FIREACCIDENT #BUS #CHENNAI