‘சாப்பாடு வேணுமா’ன்னு கேட்டது ஒரு குத்தமா..! சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே கால்டாக்ஸி டிரைவருக்கு நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 12, 2019 01:06 PM

சாப்பிட்டுகொண்டிருக்கும்போது வேடிக்கைப் பார்த்த இளைஞரிடம் சாப்பாடு வேண்டுமா என கேட்ட கால்டாக்ஸி டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Drunken youth arrested for attacking call taxi driver in Chennai

சென்னை பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் (37). கால்டாக்ஸி டிரைவரான இவர் நேற்றிரவு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள கடையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியே சென்ற இளைஞர் ஒருவர் சுஜன் சாப்பிடுவதை வெகுநேரமாக நின்று வேடிக்கை பார்த்துள்ளார். இதனால் சுஜன் அந்த இளைஞரிடம் ‘சாப்பாடு வேண்டுமா’ என கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரைமடைந்த அந்த இளைஞர் சுஜனிடம் ‘எப்படி என்னைப் பார்த்து இப்டி கேட்கலாம்..?’ என தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை சத்தம் போட்டுள்ளனர். அப்போது திடீரென உடைந்த பாட்டில் ஒன்றை எடுத்து சுஜனின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சுஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பிசெல்ல முயன்ற அந்த இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த காஞ்சி (19) என்பதும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

Tags : #DRUNKENYOUTH #CALLTAXI #DRIVER #CENTRAL #RAILWAYSTATION #CHENNAI