‘புதிய வாகன அபராதத் தொகை’... 'தமிழக அரசின் அதிரடி திட்டம்'... 'வெளியான புதிய தகவல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 11, 2019 12:10 PM

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில், திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

tamil nadu government plan to reduce penalty for vehicle

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம், கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி, ஒடிசா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில், வாகனத்தின் தொகையை விட, போலீசார் அதிக அபராதம் விதிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பன்மடங்கு அபராதம் உயர்ந்ததால், தினந்தோறும் வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அபராத தொகையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதம் 1000 ரூபாயில் இருந்து 500 ஆகவும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாயில் இருந்து 2 ஆயிரமாகவும், கார் ஓட்டுபவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. ஆகையால், குஜராத் அரசை போல அபராதத் தொகையை குறைத்து அதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கொண்ட பின்னர், தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : #NEWTRAFFICRULE #TAMILNADU #FINE #CHENNAI