'மனு கொடுக்க வந்துருக்குமோ?'.. தலைமைச் செயலகத்தையே அலற விட்ட 'நல்ல பாம்பு'.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 11, 2019 06:41 PM

சென்னை தலைமைச் செயலகத்துக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ள சம்பவம் இன்று சமூக வலைதளங்களில் வீடியோவாக வலம் வருகிறது.

Snake went inside in TamilNadu Home Secretary office

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் தமிழக தலைமை செயலக அலுவலகத்திற்குள் சென்ற நல்ல பாம்பை கேட்ட பலரும் அலறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் நான்காம் எண் நுழைவு வாயிலில் நுழைந்தது அந்த பாம்பு.

மெதுவாக உள்ளே நுழைந்த பாம்பை யாரும் கவனிக்கவில்லை, அதன் பின்னர் அங்கிருந்தபடிக்கட்டுகளில் வளைந்து நெளிந்து பாம்பு ஏறியபோதுதான் பலரும் அதனைக் கவனித்து கூச்சலிட்டனர். இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் வந்த பின், பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டதோடு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : #SNAKE #CHENNAI