மின்சார 'ரெயிலில்' செல்வோருக்கு ஒரு 'ஷாக்' அறிவிப்பு.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 13, 2019 08:47 PM

சென்னையைப் பொறுத்தவரையில் மிகவும் வேகமாகவும், அதே நேரம் மலிவான விலையிலும் பயணம் செய்வோருக்கு மின்சார ரெயில்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. சென்னை கடற்கரை தொடங்கி தாம்பரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், வேளச்சேரி,அரக்கோணம் என பல்வேறு வழித்தடங்களில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் மின்சார ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Velachery-Beach train service will be delayed by 6 hours

இந்த நிலையில் சென்னை தெற்கு ரெயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வேளச்சேரி வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று 18 ரயில்களின் சேவை 6 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுப் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மதியம் 2.10 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த சேவையானது, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி செல்லும் ரயில்கள் வேளச்சேரியிலிருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்கள் என இரண்டு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : #TRAIN #VADACHENNAI #CHENNAI