‘இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு’... ‘பேனர் வைத்த விவகாரத்தில்’... 'நடந்த திடீர் திருப்பம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 14, 2019 11:40 PM

இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான, பேனர் வைத்ததாகக் கூறப்படும், முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

subasri death issue aiadmk ex councilor admitted in hospital

சென்னை பள்ளிக்கரணை அருகே, அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருப்பவர் ஜெயகோபால். இவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’, காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதி, சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேனர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2 நாட்களாக அவரை தேடி வந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக, சுபஸ்ரீ உயிரிழந்த சாலையில் உள்ள மருத்துவமனையில், அவர் நெஞ்சுவலி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது இ.பி.கோ.304(ஏ) -கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #SUBASRI #COUNCILOR #CHENNAI