‘மெடிக்கல் ஷாப்பில் வாங்கிய பல் வலி மாத்திரை’.. ‘பிரித்த இளைஞருக்கு காத்திருத்த அதிர்ச்சி’.. கோவையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 18, 2019 12:31 PM

பல் வலிக்காக மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Younger found iron peace in tablet in coimbatore

கோவை மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் இளைஞர் ஒருவர் பல் வலிக்காக மாத்திரை வாங்கியுள்ளார். இதனை அடுத்து மாத்திரையை சாப்பிடுவதற்காக பிரித்துள்ளார். அப்போது மாத்திரையில் இரும்பு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கடைக்காரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கடைக்காரர் இதற்கு மாத்திரையை தயாரித்த நிறுவனம்தான் பொருப்பாக முடியும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல் வலிக்காக வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MEDICALSHOP #TABLET #COIMBATORE