‘கல்யாணமாகி 6 மாதத்தில்’... 'இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’.... ‘வருவாய் கோட்டாட்சியர் விசாரணை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 26, 2020 10:18 PM

பெரம்பலூர் அருகே கணவருடனான சண்டையில், திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young woman takes Excessive decision at 6 months of ma

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. 27 வயது இளைஞரான இவர், நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான பிரேமா என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரேமா நேற்று வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் பிரேமா இறந்துள்ளதால், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா மேல் விசாரணை நடத்தி வருகிறார். மனைவி இறந்தை அறிந்த கணவர் பாலசுப்பிரமணி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #PERAMABALUR #WOMAN #YOUNG