23 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 24, 2020 01:01 PM

இங்கிலாந்தில் இருந்து மணிப்பூர் திரும்பிய இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

23 year old woman in Manipur tests positive for Coronavirus

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியில்லாமல் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து மணிப்பூர் திரும்பிய 23 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags : #COVID #CORONAVIRUSLOCKDOWN #STAYSAFE #MANIPUR #WOMAN