'நடுராத்திரி தங்கச்சி ரூமில் கேட்ட அலறல்'...'பதறி அடித்து ஓடிய அக்கா'... அதிரவைத்த கொடூர காட்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 19, 2020 11:45 AM

அக்கா ஒரு அறையில் தூங்கி கொண்டிருக்க தங்கை மற்றோரு அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fearing Poor Performance Physics in exam, School Girl commits suicide

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க மாயன். முறுக்கு வியாபாரம் செய்து வரும் இவருக்கு, திருமணமாகி சுகப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பிரதீ‌ஷா (வயது 18), தீபிகா (17) என்ற 2 மகள்களும், சர்வே‌‌ஷ் பாண்டி (10) என்ற மகனும் இருந்தனர்.

இதனிடையே திரித்துவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தீபிகா பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பிளஸ்-2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்பியல் தேர்வு நடந்தது. நடந்து முடிந்த தேர்விற்கான வினாக்கள் சற்று கடினமாக இருந்ததால், தீபிகா அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் தீபிகா கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தங்க மாயன் தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு, தனது மனைவி சுகப்ரியாவுடன் சென்றுள்ளார். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு தீபிகா, அக்காள் பிரதீ‌ஷாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததாகவும், அந்த தேர்வை சரியாக எழுதவில்லை எனவும் கூறி அழுதுள்ளார்.

உடனே தனது தங்கையை தேற்றிய பிரதீ‌ஷா, எல்லாம் சரி ஆகி விடும், உனக்கு நல்ல மார்க் கிடைக்கும் என ஆறுதல் கூறியுள்ளார். அக்கா ஆறுதல் கூறிய நிலையில், தனக்கு தூக்கம் வருகிறது என தீபிகா தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென தீபிகா அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு கண் விழித்த பிரதீ‌ஷா, தீபிகாவின் அறைக்கு ஓடி சென்றார்.

அப்போது அங்கு பிரதீ‌ஷா கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு ஆறுதல் கூறி அனுப்பிய தனது தங்கை தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தார். இதற்கிடையே பிரதீ‌ஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்,  தீபிகாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனேவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #SCHOOLSTUDENT #PHYSICS EXAM #FEAR #NAGERCOIL