“வெளிய போகாதீங்க அப்பா!”.. ‘பணிக்குச் செல்லும் காவலரிடம் கதறி அழும் குழந்தை!’.. உருக வைக்கும் விடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 26, 2020 09:03 PM

மகாராஷ்டிராவில் பணிக்கு செல்லும் காவலர் ஒருவரை பணிக்கு செல்ல வேண்டாம் என அவரது குழந்தை வெளியில் செல்ல வேண்டாம் என்றபடி கதறி அழுது கூறும் வீடியோ உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

child crying to stop his cops father going amid coronalockdown

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா ஆட்கொல்லி நோயை சமாளிக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வேளைகளில் மூடப்பட்டாத கதவுகளாய் இருந்து வருபவர்கள் காவல்துறையினரே. மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தன் குழந்தையை எவ்வளவோ சமாதானம் செய்துவிட்டு, வீட்டை விட்டு பணிக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த அந்த காவலரிடம், அவரது குழந்தை அழுதுகொண்டே கதறிப் பேசும் இந்த வீடியோவை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, அந்த ட்விட்டரில்,  “ஆபத்தை உணர்ந்தும் காவல் துறையினர் பணிக்குச் செல்வதற்கு நன்றி. காவல் துறையினர் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”

என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags : #CORONAVIRUSLOCKDOWN #21DAYSLOCKDOWN #INDIAVSCORONA #CORONAINDIA