'கொரோனா' 'தடுப்பூசி' முதன் முறையாக.... '43 வயது' பெண்ணுக்கு 'செலுத்தப்பட்டது'... 'முடிவுக்காக' காத்துக் கொண்டிருக்கும் 'உலகம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி, சோதனை முயற்சியாக, முதன்முறையாக 43 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டது. அதன் முடிவுக்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை, ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கம் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில், இந்த வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் 3,226 பேரும், இத்தாலியில் 2,158 பேரும், ஈரானில் 853 பேரும் இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் தேசிய சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பூசி பரிசோதனையை துவக்கி உள்ளது. இதற்காக 45 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று இச்சோதனைக்கான முயற்சிகள் தொடங்கின. இன்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி, சோதனை முயற்சியாக, முதன்முறையாக 43 வயது பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டது. இரு குழந்தைகளுக்கு தாயான, 43 வயது நிரம்பிய ஜெனிபர் ஹேலர் என்பவருக்கு இத்தடுப்பூசி போடப்பட்டது. பல்வேறு கட்டங்களில், பரிசோதனைகளுக்குப் பிறகு இந்தமருந்து நடைமுறைக்கு வர 12 முதல் 18 மாதங்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
