'சொத்துக்காக சொந்தகாரங்களே என் புருஷன'... ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறிய பெண்!... 3 குழந்தைகளுடன்... தாய் செய்த விபரீத காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 17, 2020 05:17 PM

கணவரை உறவினர்கள் கடத்தி வைத்துள்ளதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

madurai woman tries for self immolation for rescue of husband

மதுரை மாவட்டம் மேலூர், கோட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா. இவர் கணவர் மகேந்திரன். வனிதாவின் உறவினர்கள் அவரது கணவரை கடத்திவைத்து சொத்துக்காக மிரட்டுவதாகவும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அவர்கள் தங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதாகவும் வனிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தனது 3 குழந்தைகளுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குள் வனிதா வந்துள்ளார். அப்போது, திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை உடல் முழுவதிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அந்த சமயம், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் வனிதாவை தடுத்துநிறுத்தினர்.

இன்று கலெக்டர் அலுவலகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும், பெண் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : #SUICIDEATTEMPT #MADURAI #COLLECTORATE #WOMAN