வீட்டை எதிர்த்து 'காதல் திருமணம்' செய்த இளம்பெண் தற்கொலை... மொபைலில் இருந்த 'வீடியோவைப்' பார்த்து... 'அதிர்ந்து' போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண் தான் தற்கொலை செய்து கொள்வதை மொபைலில் ரெக்கார்ட் செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த தீபா(25) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ராகுல் (30) என்பவரும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இருவரும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த தீபா மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தீபா உயிரிழந்தார். இதனால் அதிர்ந்து போன தீபாவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபாவின் மொபைலை பார்த்து அதிர்ந்து போயினர். காரணம் தற்கொலைக்கு முன் அனைத்தையும் தீபா அதில் ரெக்கார்ட் செய்து வைத்திருந்து இருக்கிறார். இதனால் எதற்காக தீபா அதை ரெக்கார்ட் செய்து வைத்தார்? என்ற ரீதியில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
