“எனக்கு கொரோனா இருந்தா உங்களுக்கும் பரவட்டும்!”.. காரை நிறுத்திய போலீஸாரின் கிட்டே வந்து பெண் செய்த ‘பதறவைக்கும்’ சம்பவம்!.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 26, 2020 09:23 AM

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதை அடுத்து கொல்கத்தாவில் பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசாரிடம் பெண் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

CoronavirusLockdown woman licks kolkata cops amid covid19 fear

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அந்த பெண் சென்று கொண்டிருந்த கேப்-ஐ போலீசார் விசாரணைக்காக  நிறுத்தி அந்த கேப் டிரைவரிடம் விசாரித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது காரில் இருந்து இறங்கிய அப்பெண் காரை நிறுத்திய போலீசாரிடம்  கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவரின் அருகில் சென்று தனது எச்சிலை போலீசாரின் சீருடை மீது படரும்படி செய்து தனக்கு கொரோனா வைரஸ் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கும் அது பரவட்டும் என்று நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். போலீசாரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இப்பெண்ணின் செயல் வீடியோவாக

வெளியானதை அடுத்து இப்போது இச்சம்பவம் சர்ச்சைக்குரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

Tags : #WOMAN #KOLKATA #CORONAVIRUSLOCKDOWN #CURFEWININDIA