யாரு ஏரியால வந்து யாருடா 'துட்டு' கேக்குறது...? 'பங்கு... சம்பவம் பண்ணினாதாண்டா நமக்கு கெத்து...' தந்தை கண் முன்னே மகனுக்கு நடந்த பயங்கரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 05, 2020 03:30 PM

ஒரு சில தவறான எடுத்துக்காட்டுகளை பார்த்து இரு இளைஞர்கள் தங்களை இந்த ஊர் மக்கள் கதாநாயகனாக பார்க்க வேண்டும் என்று நினைத்து அப்பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young people who murdered until the cell phone was fixed

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் சம்மட்டிபுரத்தைச் சேர்ந்தவர்கள் விமல் (20) மற்றும் கார்த்திக் (22). இவர்களின் வாழ்க்கையின் லட்சியமே கெத்தா ரவுடி போல் உலவ வேண்டும் என்பது தானாம். இதை நிருபிக்க கடந்த இரு ஆண்டுகளில் பல சின்ன சின்ன குற்ற செயல்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வெளியே வந்து கெத்தாக சுற்றியுள்ளனர்.

இருவரில் கார்த்திக் என்பவர் டிக்டாக் பிரபலம். தன்னை தானே கதாநாயகனாக மையப்படுத்தி பல டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் பணக்கட்டுகளை வைத்தும் பாட்டு பாடியும், ஆடியும் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

சமீபத்தில் கார்த்திக்கின் செல்போன் பழுதடைந்த போது அதே பகுதியில் மிக்ஸி கிரைண்டர் மற்றும் செல்போன் பழுது நீக்கும் சதீஷ் (32) என்பவரிடம் கொடுத்துள்ளனர். செல்போன் சரி செய்த சதீஷ் அதற்கு கூலியாக 500 ரூபாய் கேட்டுள்ளார்.

ஏரியாவில் கெத்தாக இருக்கோம் என்று எண்ணிய விமலுக்கும், கார்த்திக்கும் இது ஒரு பெரிய அவமானமாக தெரியவே எங்க ஏரியாவில் கடையை வைத்துக்கொண்டு எங்களிடம் காசு கேட்கிறாயா என்று சதிஷை மிரட்டியுள்ளனர். அதன் பின் இருவரும் கூடி பேசி ஏரியாவில் நாம் கெத்து காட்ட வேண்டும் என்றால் சதீஷை கொலை செய்தால்தான் நம்மை பார்த்து பயப்படுவார்கள் என முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி மாலை கடையில் இருந்த சதீஷை அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்‌.

சம்பவ இடத்தில் இருந்த பொது மக்களும், சதிஷின் தந்தையும் தடுக்க முயன்றும் முடியாமல் போனது. தடுக்க வந்த அவர்களுக்கும் கொலை மிரட்டல் விட்டு சைக்கிளில் தப்பித்து சென்றுள்ளனர். அதை அடுத்து சதிஷின் தந்தை ராமலிங்கம் எஸ்.எஸ் காலனி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கொலை நடந்த இடத்திற்கு வந்த போலிசார் விசாரணையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த விமல் மற்றும் கார்த்திகை கைது செய்துள்ளனர்.

சிறுவயதிலேயே தவறான எடுத்துக்காட்டுகளை தனது பிறப்பின் லட்சியமாக மாற்றி கொண்டு வாழ்க்கையினை இழக்கும் இளைஞர்களுக்கு விமல் மற்றும் கார்த்திக் போன்றவர்கள் தன சரியான உதாரணம். .

Tags : #CELLPHONE #MADURAI