'தாயுடன் தகாத உறவு' .. 'கண்டித்த மகன்'.. 'கேட்காத ஆட்டோ டிரைவர்'.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 20, 2019 10:37 AM

தாயுடன் தகாத உறவில் இருந்த ஆட்டோ டிரைவரை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai youth killed Auto driver for illegal affair with her mom

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி-லட்சுமி தம்பதி. இவர்களுக்கு பெரிய அஜித், சின்ன அஜித் என்ற இரு மகன்கள் உள்ளனர். தாம்பரம் அருகே வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்வர் பாட்சா (31). இவர் கொளத்தூரில் தாயுடன் தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் அன்வர் பாட்சாவுக்கும், லட்சுமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்வர் பாட்சா அடிக்கடி லட்சுமியின் வீட்டிற்கு வந்துள்ளார்.இதனைக் கண்டுபிடித்த இளையமகன் சின்ன அஜித் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி ரெட்டேரி சிக்னல் அருகே ஆட்டோவில் லட்சுமி, அன்வர் பாட்சா மற்றும் அவரது தாய் மூவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். தகவலறிந்து சின்ன அஜித் தனது நண்பர்களுடன் அங்கே சென்றுள்ளார். அப்போது சின்ன அஜித் மற்றும் அன்வர் பாட்சாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சின்ன அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்வர் பாட்சாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் சின்ன அஜித் (21), அஸ்வின் (22), பன்னீர் செல்வம் (20), சந்தோஷ் குமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #KILLED #CRIME #MURDER #CHENNAI #AUTODRIVER #ILLEGALAFFAIR #MOTHER