'பட்டாக்கத்தியில்' தான் 'கேக்' வெட்டுவிங்களோ... 'ஜிகர்தண்டா' 'பாபிசிம்ஹா'ன்னு மனசுக்குள்ள நினைப்பு...கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துட்டு போங்க தம்பி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 11, 2020 01:10 PM

திருவள்ளூர் அருகே, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, பட்டாகத்தியால் கேக் வெட்டிய இளைஞர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

youths who cut the cake with skythe were arrested

இப்போதேல்லாம் பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவதுதான் ட்ரெண்டிங்கில் உள்ளது.  போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, கடந்தாண்டு பிப்ரவரியில் அரிவாளால் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பினுவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்டவற்றில் பதிவிடுவதற்காகவே பலர் இதுபோன்ற அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு கைதான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

அந்த வகையில்,  கடந்த மாதம்,  திருமண விழாவில், உடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கிய, பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடிய மணமகன் புவனேஷை, மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றபோது போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

அஜித்குமார் என்ற இளைஞரின் பிறந்தநாளை கொண்டாட, கிராம சாலையின் நடுவே, பட்டாக் கத்தியால் கேக் வெட்டி, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக, அஜித்குமார், கலைவாணன், விஜய், உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர்.

Tags : #THIRUVALLUR #YOUTH #ARRESTED #CUT CAKE SKYTHE