'கணவர்' ரொம்பவே 'இடையூறு' செய்தார்... அதனாலதான் 'போட்டுத்தள்ள' முடிவெடுத்தேன்... 'கள்ளக்காதலர்களுடன்' கைதான மனைவி 'பகீர்' தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொல்ல முயற்சி செய்ததாக கள்ளக்காதலர்களுடன் கைதான பள்ளி ஆசிரியை வாக்குமூலம் அளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், மொட்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவரது மனைவி பிரியா அரசு அண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியை பிரியாவுக்கு பள்ளியில் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காரிமங்கலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வாலிபர்கள் உள்ளிட்ட பலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை கணவர் பொன்னுரங்கம் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரியா காரிமங்கலம் மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்த கள்ளக்காதலர்கள் சக்திவேல், அருண்குமார் ஆகியோருடன் சேர்ந்து, கணவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது முகத்தில் தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றார்.
அவர்களிடமிருந்து தப்பிய பொன்னுரங்கம் காரிமங்கலம் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார் பிரியாவையும், அவருக்கு உடந்தையாக இருந் சக்திவேல், அருண்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான, பிரியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை ஏற்கெனவே காரை ஏற்றி கொல்ல முயன்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே பிரியாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
