‘எதுக்கு கஷ்டப்படுறீங்க? இப்படி வந்து நின்னுக்கோங்க!’.. பேருந்து பயணிகளிடம் பெண்கள் பார்த்த வேலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 01, 2020 12:30 PM

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ளது சம்பை முத்துரெகுநாதபுரம். இப்பகுதியைச் சேர்ந்த 62 வயதான குஞ்சரம் அம்மாள், தனது ஊரில் இருந்து ராமநாதபுரம் செல்வதற்காக பேருந்தில் வந்துள்ளார்.

women arrested for chain snatching in thoothukudi

அப்போது பேருந்தில் பர்தா அணிந்திருந்த இரண்டு பெண்கள், குஞ்சரம் அம்மாளிடம், தங்கள் அருகில் வந்து சிரமம் இன்றி நிற்குமாறு கனிவோடு கூறியுள்ளனர். அதை நம்பி அவர்களின் அருகில் சென்று நின்றுகொண்டிருந்த குஞ்சரம் அம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கசெயினை அந்த 2 பர்தா பெண்களும் நைஸாக திருடினர்.

அதற்குள் பேருந்து ராமநாதபுரம் பேருந்து நிலையத்துக்கு வர, அருகில் இருந்த சில பெண்கள் குஞ்சரம் அம்மாளின் செயினை அந்த பெண்கள் திருடியது பற்றி கூற, உடனே ஓடிச் சென்ற குஞ்சரம் அம்மாள் அந்த 2 பெண்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் கூடி மீதமுள்ள பெண்ணையும் பிடித்துவிட, 2 பெண்களையும் கேணிக்கரை போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

விசாரணையில் திருடிய 2 பெண்களும், தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற செல்வி மற்றும் இசக்கியம்மாள் என தெரியவந்ததை அடுத்து இருவரும் இன்னும் எங்கெங்கெல்லாம் தத்தம் கைவரிசையை காட்டியுள்ளனர் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #POLICE #THOOTHUKUDI #THEFT