‘பதைபதைக்க வைத்த ஆட்டோ ரேஸ்’... ‘நொடியில்’... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 14, 2019 06:37 PM

சென்னையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டபோது, கன்டெய்னர் லாரி மீது மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

man died in lorry accident during chennai auto race

வில்லிவாக்கம் திருவேங்கட அய்யர் தெருவைச் சேர்ந்தவர், 30 வயதான பிரபாகரன். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று காலை, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறி, பலத்த காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், நண்பர்கள் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும், உடனடியாக போலீசாருக்கு தவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரபாகரனின் நண்பர்களிடம் எங்கே விபத்து நடந்தது என்பது குறித்து விசாரித்தபோது. முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், பிரபாகரன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர், கடந்த புதன்கிழமையன்று காலை, போரூர் டோல்கேட்டில் இருந்து தாம்பரம் வரை, மதுரவாயல் பைபாஸ் சாலையில். ஆட்டோ ரேசில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் நண்பர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட பிரபாகரன், ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் மீது மோதியதில், பலத்த காயம் அடைந்துள்ளார். போலீசுக்கு பயந்து இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து விட்டதாக நண்பர்கள் கூறியது தெரியவந்ததால், வில்லிவாக்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CHENNAIHORROR #POLICE #AUTO #DIED