'மனநல சிகிச்சை பெற வந்தபோது’... ‘சிறுவர்களால்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 08, 2019 10:29 AM

மனநலம் தொடர்பான சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணை, சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

below 18 years old boys trying to rape mentally ill woman

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், மனநலம் மற்றும் உடல்நலம் தொடர்பான சிகிச்சை அங்குள்ள தர்காவில் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தமிழகம் மட்டுமில்லாது, பக்கத்து மாநிலங்களிலும் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்று வருவார்கள். இந்நிலையில், கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கருநாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பதர் என்பவரின், மனநலம் பாதித்த 21 வயது மகளை குணப்படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளார்.

சிகிச்சை பெறுவதற்காக, ஒரு மாதம் முன்பு வீடு எடுத்து, தந்தையும், மகளும் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நள்ளிரவு, இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற இளம்பெண்ணை, அங்கு வந்த சிலர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதனால் அந்தப் பெண் கூச்சலிட்டு கத்த, அக்கம் பக்கத்தினர் விழித்து, வெளியே வந்தபோது, அவர்கள் அப்பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடினர். அவர்களைத் துரத்திச் சென்றபோது, 2 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர்.

இதையடுத்து பிடிபட்ட இருவரையும் ஏர்வாடி தர்ஹா காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து, பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட மற்ற சிறுவர்களும் சிக்கினர். பிடிபட்ட அனைவரும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MOLEST #RAPE #YOUNG #WOMAN #ERVADI