'என்ன காப்பாத்து ஹரி'...'ரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள்'...'என் மனைவி' எங்க?...அதிரவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 28, 2019 03:32 PM

வீட்டில் இருந்த பெண் காணாமல் போன நிலையில், என்னை காப்பாற்றுங்கள் என குளியலறையில் ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Blood note on bathroom wall in salem police suspect murder

சேலம் மாவட்டம் சின்னத் திருப்பதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். ஜவுளித் தொழில் செய்து வரும் இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய ஹரிஹரன் வீட்டில் தனது மனைவியை தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து வீடு முழுவதும் அவர் தேடிய போது தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் உள்ளே ரத்தக்கறையுடன் ஹாக்கி ஸ்டிக் ஒன்று கிடந்தது. மேலும் தரையில் ஆங்காங்கே ரத்தம் சிந்திக் கிடந்தது. இதையடுத்து குளியலறைக்குச் சென்ற போது தான் அந்த காட்சி ஹரி ஹரனை அதிர்ச்சியில் உறைய வைத்தது. குளியலறை சுவரில் "விமல் ஆளுங்க. காப்பாத்து ஹரி" என ரத்தத்தால் எழுதப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஹரிஹரன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தடயவியல் வல்லுநர்கள் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வந்தது காவல்துறை. வீட்டிலிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகளும், ரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டையும் தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனிடையே விமல் என்பவர் ஹரிஹரனிடம் பணியாற்றும் ஊழியர். அவருடைய பெயர் எதற்காக குளியலறையில் எழுதப்பட்டுள்ளது என்பது காவல்துறையினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ்செல்விக்கு என்ன ஆனது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #MURDER #POLICE #SALEM