'திடீரென பற்றிய தீ'...'கதறி துடித்த தொழிலாளர்கள்'... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 31, 2019 02:50 PM

ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி இதுவரை 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 58க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.

Massive fire and blast caused in Dhule chemical factory in Maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தின் ஷிர்பூர் பகுதியில் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஆலையில் 100க்கு மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில், ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது ஆலையின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் வெளியே வரமுடியாத வண்ணம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கதறினார்கள்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் தீ அனைத்து பகுதிகளுக்கும் மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு வீரர்கள் வேகமாக பரவி வரும் தீயினை அணைப்பதற்காக போராடி வருகிறார்கள்.

இதனிடையே தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர்கள் வெடித்ததே தீ விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் துலே எஸ்.பி. விஷ்வாஸ் பந்த்ரே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தீவிபத்தில் சிக்கி இதுவரை 20 தொழிலாளார்கள் பலியாகி இருப்பதாகவும், மேலும் 58க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் கூறினார். இதற்கிடையே மேலும் பலர் தொழிற்சாலையினுள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Tags : #FIREACCIDENT #ACCIDENT #MUMBAI #MAHARASHTRA #CHEMICAL FACTORY