‘மணமகனுக்கு நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 01, 2019 12:32 AM

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சாலையோர கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

2 youngsters died in accident near villupuram

விழுப்புரம் அருகே தேவதானம்பேட்டை வனதுர்க்கை அம்மன் ஆலயத்தின் எதிரில் உள்ள சாலையோர கிணற்றில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தவறி விழுந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீவிரமாகத் தேடியதில் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார். கிணற்றில் விழுந்த இருசக்கர வாகனத்தை மீட்டபோது, அதிலிருந்த பெட்ரோல் கிணற்று நீரில் கலந்துள்ளது. அதன் மூலம் ஏற்பட்ட வாயு காரணமாக தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மற்றொருவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தீயணைப்பு வாகனத்திலிருந்த தண்ணீரை கிணற்றுக்குள் பீய்ச்சி அடித்து, பெட்ரோல் கலந்த வாயுவை கிணற்றில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து மீண்டும் கிணற்றுக்குள் இறங்கிய அவர்கள் மற்றொருவரின் சடலத்தையும் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவரின் திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்கச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : #VILLUPURAM #ROAD #ACCIDENT #GROOM #MARRIAGE #INVITATION