‘7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி’!.. ‘அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 03, 2020 11:55 AM

7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADMK candidate lost by 7 votes Local body election results

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் ராமலிங்கம் என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து 7 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அதில் ராமலிங்கம் 1352 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார் 1359 வாக்குகளும் பெற்றனர். 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் திடீரென ராமலிங்கம் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்த சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார், அவரை வெளியே தூக்கி சென்றுள்ளார். பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்த செவிலியரை முதலுதவி அளிக்க அழைத்துள்ளார். செவிலியர் மேற்கொண்ட முதலுதவி சிகிச்சையை அடுத்து ராமலிங்கம் கண் விழுத்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags : #ELECTIONS #AIADMK #LOCALBODYELECTIONRESULTS