‘கரூர் கலெக்டர் ஆபீஸ் முன் இளைஞர் செய்த விபரீத செயல்’.. கதறியழுத குடும்பத்தினர்.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 24, 2020 05:29 PM

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man tries to immolation in front of karur collector office

கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அகிலா. இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் இருக்கிறார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் சரணவனின் உறவினர்கள் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தாக கூறப்படுகிறது.

இதனால் சரவணன் தனது பெற்றோருடன் ஊருக்கு ஒதுக்குப்புறமான நிலத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சரவணனின் உறவினர்கள் அவர்களது வீட்டை அதிகாரிகளின் உதவியுடன் இடிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடும்பத்துடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சரவணன், திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனே சரணவனிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவர் மீது தண்ணீர் ஊற்றியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SUICIDEATTEMPT #KARUR #COLLECTOROFFICE