‘4 பந்துகளில் மாறிய ஆட்டம்’.. ‘பேட்ஸ்மென்களை மிரட்டிய மலிங்கா’.. ‘கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Sep 06, 2019 11:01 PM
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. 126 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் லசித் மலிங்கா மிகப் பெரிய அதிர்ச்சியளித்தார். போட்டியில் 3வது ஓவரை வீசிய மலிங்கா தொடர்ந்து 4 பந்துகளில் 4 ரன்களை எடுத்தார்.
இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை மலிங்கா படைத்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிகபட்சமாக 6 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இலங்கையின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதல் 2 டி20 போட்டிகளை வென்ற நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
This is how he did it. #FourIn4 #Malinga pic.twitter.com/yiqo7hx9lI
— Sunil Avula (@avulasunil) September 6, 2019