‘மைதானத்தில் கிண்டல் செய்த ரசிகர்களுக்கு’.. ‘பிரபல வீரர் கொடுத்த பதிலடி’.. ‘வைரலாகும் வீடியோ’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Sep 09, 2019 12:34 AM
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மித் மற்றும் வார்னர் இருவருக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. தற்போது தடைக்குப் பின்னர் இருவரும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து ரசிகர்கள் ஸ்மித் மற்றும் வார்னரை மைதானத்தில் ஏமாற்றுக்காரர் என அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நடந்துமுடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வு அறையிலிருந்து ஃபீல்டிங் செய்ய களத்திற்கு வந்தபோது ரசிகர் ஒருவர் வார்னரை ஏமாற்றுக்காரர் என அழைத்துள்ளார். அதற்கு சற்றும் கோபமடையாத வார்னர் அவரைப் பார்த்து உற்சாகமாக இரண்டு கைகளையும் தூக்கி தம்ஸ்அப் காட்டிவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
David Warner's reaction to a fan shouting "Warner, you fucking cheat" is the best thing I've seen recently 😂🤣 #Ashes2019pic.twitter.com/IfvkQJhjmC
— Saurabh (@Boomrah_) September 7, 2019
